உதவி மற்றும் ஆதரவு உபுண்டுவின் அதிகாரப்பூர்வ ஆவணங்கள் ஆன்லைனிலும், டாக்கில் உள்ள உதவி ஐகான் வழியாகவும் கிடைக்கின்றன. உபுண்டு சொற்பொழிவு, இணைக்கப்பட்ட உபுண்டு மன்றங்களுடன் சேர்ந்து, புதிய மற்றும் பட்டறிவு வாய்ந்த பயனர்களுக்கு வழிகாட்டிகளையும் விவாதங்களையும் வழங்குகிறது. நட்பு, சமூகத்தால் இயக்கப்படும் சூழலில் அதிக அறிவுள்ள உருவாக்குபவர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கான அணுகலை இங்கே நீங்கள் பெறுவீர்கள். நிறுவன பயனர்களுக்கு, பணியிடத்தில் உபுண்டுவைப் பாதுகாப்பாகப் பயன்படுத்தி நிர்வகிப்பதை எளிதாக்குவதற்கு கேனானிகல் வணிக ஆதரவை வழங்குகிறது. |
• அதிகாரப்பூர்வ ஆவணங்கள் • உபுண்டு சொற்பொழிவு • உபுண்டு ப்ரோவுடன் எண்டர்பிரைஸ்-கிரேடு 24/7 ஆதரவு • உபுண்டுவிடம் கேள் |